×

என் தந்தை டிரம்ப் ஒரு பொய்யர்! விசாரணை குழுவிடம் மகள் வாக்குமூலம்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் நான்கு ஆண்டுகால ஆட்சி காலத்தால்,  அவரது மகளான இவான்கா டிரம்ப் அவரது ஆலோசகராக செயல்பட்டு வந்தார். இந்த  நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின்  மீதான தாக்குதலை விசாரிக்கும் அமெரிக்க காங்கிரசின் விசாரணைக் குழு  முன்பாக, இவாங்கா டிரம்ப் முதல் முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும்  கடந்த 2020ல் நடந்த அதிபர் தேர்தல் குறித்து, அப்போது அதிபராக இருந்த  டிரம்பின் கருத்து குறித்தும் விளக்கம் அளித்தார். அதில், ‘கடந்த 2020ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, தேர்தல் மோசடி நடந்ததாக எனது தந்தை டிரம்ப் புகார் கூறியதை நான் நம்பவில்லை; அவர் ஒரு பொய்யர். தேர்தலின் போது எந்தவொரு மோசடிகள் தொடர்பான ஆதாரத்தையும், அமெரிக்க பாதுகாப்புத் துறை கண்டுபிடிக்கவில்லை. அதேநேரம், நான்கு மாநிலங்களில் நடந்த தேர்தலில் மோசடி நடந்ததாக, எனது தந்தை கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் போலியானது; முட்டாள்தனமானது’ என்று தெரிவித்துள்ளார்….

The post என் தந்தை டிரம்ப் ஒரு பொய்யர்! விசாரணை குழுவிடம் மகள் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Trump ,Washington ,President Trump ,Ivanka Trump ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்