×

குற்றாலம் சித்திர சபையில் குற்றாலம் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை

தென்காசி: குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் கடந்த 9ம் தேதி ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 12ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 13ம் தேதி தேரோட்டம், நேற்று முன்தினம் காலை மற்றும் மாலையில் நடராச மூர்த்திக்கு வெள்ளை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது. நேற்று காலையில் சித்திர சபையில் நடராச மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. சிவனடியார்களின் சிவபூத கண வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. தாண்டவ தீபாராதனையை ஜெயமணிசுந்தரம் பட்டர் தலைமையில் கணேசன் பட்டர், பிச்சுமணி பட்டர், மகேஷ் பட்டர் ஆகியோர் நடத்தினர்.

இதில் கட்டளைதாரர்கள் மற்றும் கோயில் உதவி ஆணையர் செல்வகுமாரி, முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், இலஞ்சி அன்னையாபாண்டியன், திமுக மாவட்ட துணை செயலாளர் ஆயான்நடராஜன், சோமசுந்தரம், ராஜேந்திரன், அதிமுக பேரவை சாலுக்குட்டி பாண்டியன், வார்டு செயலாளர் பாஸ்கர், கீழப்புலியூர் சங்கர், சர்வோதயா கண்ணன், பாஜ பொதுச்செயலாளர்கள் பிலவேந்திரன், குத்தாலிங்கம், ஈஸ்வரன், தம்பிரான், சிவபூதமாரியப்பன், ஐயப்பன் உட்பட ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். நாளை (18ம் தேதி) காலை 10.30 மணிக்கு விசு தீர்த்தவாரி நடக்கிறது. 11 மணிக்கு திருவிலஞ்சிக்குமரன் பிரியாவிடை கொடுக்கும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர்கள் சங்கர், செல்வகுமாரி, மற்றும் கட்டளைதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Kuttalam Natarajar ,Courtallam Chirutha Sabha ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?