×

கிண்டி வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 10ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வருகிற 10ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் வீர ராகவராவ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வருகிற 10ம் தேதி (வெள்ளி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் 30 வயதிற்கு உட்பட்ட 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வி தகுதி உடைய அனைவரும் கலந்துகொள்ளலாம்.  இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post கிண்டி வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 10ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Gindi Employment Office Complex ,Tamil Nadu Government ,Chennai ,Alandur Road, Guindy ,Guindy ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...