×

நிலக்கரி நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு: ராமதாஸ் வரவேற்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க 11 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட சுமார் 8000 ஏக்கர் நிலங்களை, அதற்கான இழப்பீட்டை திரும்ப வசூலிக்காமல், அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ35,000 என்ற மிகக்குறைந்த விலையே தரப்பட்டதால் அதிக இழப்பீடு தர வேண்டும் அல்லது நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக தான் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது.  பாட்டாளி மக்களின் நில உரிமையையும், வாழ்வுரிமையையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். மீதமுள்ள இரு கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களையும் அரசு உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post நிலக்கரி நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு: ராமதாஸ் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,Ramadas ,BAMA ,Jayangkond, Ariyalur district ,
× RELATED மருத்துவர்களுக்கு இணையாக கால்நடை...