×

ஓடும் பேருந்தில் சிறுமி பலாத்காரம்

பெட்டயாஹ்:  பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள மோதிஹரி பேருந்து நிறுத்தத்தில் 17 வயது சிறுமி நின்றிருந்தார். அந்த சிறுமி மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டயாஹ் பேருந்திற்காக காத்துக்கொண்டு இருந்தார். அந்த வழியாக வந்த பேருந்து ஒன்று  பெட்டயாஹ் செல்வதாக கூறியதால் சிறுமி அந்த பேருந்தில் ஏறிக்கொண்டார். பேருந்தில் வேறு யாரும் இல்லாத நிலையில் அதில் இருந்தவர்கள் சிறுமிக்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர். இதனை வாங்கி குடித்தவுடன் சிறுமி சுயநினைவை இழந்துள்ளார். பின்னர் கண்விழித்து பார்த்தபோது பேருந்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் அலங்கோலமாக கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர், உதவியாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். …

The post ஓடும் பேருந்தில் சிறுமி பலாத்காரம் appeared first on Dinakaran.

Tags : Pettah ,Motihari ,Bihar ,East Champaran district ,Dinakaran ,
× RELATED ரூ.1.5 கோடி செலவில் கட்டப்படும் சிறிய...