×

காட்டரம்பாக்கத்தில் ரூ.75 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு

ஸ்ரீ பெரும்புதூர்:காட்டரம்பாக்கம் ஊராட்சியில்ரூ.75 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் திறக்கப்பட்டது.ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம் இருங்காட்டுகோட்டை சிப்காட் தனியார் கார் தொழிற்சாலை சார்பில்,ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் காட்டரம்பாக்கம் ஊராட்சியில் ரூ.75 மதிப்பில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டி கொடுக்கபட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார்.ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வபெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தனர். இதில், ஸ்ரீ பெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு புதிய சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் தொழிற்சாலை நிர்வாகிகள், உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்….

The post காட்டரம்பாக்கத்தில் ரூ.75 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Katarambakkam ,Kadarambakkam Curry ,Sri Muthur Union Arangatukotta Chipkat Private Car Factory ,Dinakaran ,
× RELATED காட்டரம்பாக்கம் கிராமத்தில் மாட்டு...