×

ஸ்ருதிஹாசனை பிரிந்தது ஏன்? சாந்தனு ஹசாரிகா பேட்டி

மும்பை: ஸ்ருதிஹாசன், டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா இருவரும் காதலித்து வந்தனர். பிறகு மும்பை தனி வீட்டில் லிவிங் டூ கெதர் பாணியில் வாழ்ந்தனர். இந்நிலையில், தங்களின் காதலை பிரேக்அப் செய்துவிட்டார்கள். அதை உறுதி செய்யும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்ததுடன், தாங்கள் சேர்ந்து போஸ் கொடுத்தவீடியோ மற்றும் போட்டோக்களை நீக்கிவிட்டனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, அவர்கள் கடந்த மார்ச் மாதமே பிரிந்துவிட்டதாகவும், அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகளில் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளால் இருவரும் சுமுகமாகப் பிரிந்துவிட முடிவு செய்ததாகவும் தகவல் கிடைத்தது. இதுபற்றி சாந்தனு ஹசாரிகா அளித்த ஒரு பேட்டியில், ‘என்னை மன்னித்துவிடுங்கள். இதுபற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.

 

The post ஸ்ருதிஹாசனை பிரிந்தது ஏன்? சாந்தனு ஹசாரிகா பேட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shruti Haasan ,Shantanu Hazarika ,Mumbai ,Instagram ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு