×

கோவையில் தொப்புள் கொடி அறுக்காத பச்சிளம் குழந்தையை துணிப்பையில் சுற்றி வீச்சு

கோவை: கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையத்தில் கோபால்சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் எதிரே உள்ள பகுதியில் நேற்று அதிகாலையில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தெரு நாய் ஒன்று குழந்தை வைக்கப்பட்டிருந்த துணியை இழுத்து கொண்டிருந்தது. அந்த பகுதி பொதுமக்கள் சென்று பார்த்தபோது, அங்கே பெண் குழந்தை ஒன்று மஞ்சள் துணிப்பையில் சுற்றிய நிலையில் கிடந்தது. தொப்பு கொடி அறுக்காமல், ஈரம் கூட காயாமல் பாலுக்காக குழந்தை அழுது கொண்டிருந்தது.அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ்காரர் பாலன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் ஒப்படைத்தார். குழந்தை 1.5 கிலோ எடையில் இருந்தது. குறை பிரசவத்தில் குழந்தை பிறந்திருப்பதாக தெரிகிறது. குழந்தைக்கு எடை குறைவு பிரச்னையால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குழந்தைக்கு மருத்துவமனையில் பிரசவம் செய்த தாய்மார்களின் மூலமாக பால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தாய் இல்லாமல் ‘தொட்டில் குழந்தையாக’ அடைக்கலமான பச்சிளம் குழந்தையை தாய்மார்கள், நர்சுகள் பாசத்துடன் கவனித்து வருகின்றனர். குழந்தையை போட்டு சென்ற இடத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை.குழந்தையின் அருகே சாக்கடை கால்வாய் இருந்தது. அதற்கு அடுத்து கழிவறை செல்லும் பகுதி இருந்தது. குழந்தையை ஏதாவது துணிப்பையில் வைத்து கொண்டு வந்து ஆள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்து போட்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.குழந்தை நேற்று முன்தினம் இரவில் பிறந்திருக்கலாம். வீட்டில் வைத்து பிரசவம் பார்த்து இருப்பதாக தெரிகிறது. தொப்புள் கொடியை முறையாக துண்டிக்காமல் கிளிப் மாட்டாமல் அப்படியே விட்டிருந்தனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கர்ப்பிணி பெண்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் குழந்தை பிறந்துவிட்டதால் தாய் வீசி சென்றிருக்கலாமா? அல்லது குழந்தை பிறப்பை உறவினர்களிடம் மறைக்க வீசி சென்றிருக்கலாமா? என போலீசார் விசாரிக்கின்றனர்….

The post கோவையில் தொப்புள் கொடி அறுக்காத பச்சிளம் குழந்தையை துணிப்பையில் சுற்றி வீச்சு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Gopalswamy Temple ,Neelikonampalayam, Singhanallur, Coimbatore ,Pacchilam ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்