×

கோதுமை அல்வா

என்னென்ன தேவை?

சம்பா கோதுமை - 1/4 கிலோ,
சர்க்கரை - 1/2 கிலோ,
நெய் - 1/4 கிலோ,
முந்திரி - 25,
ஏலக்காய் தூள் - சிறிதளவு,
ஆரஞ்சு கலர் பவுடர்  - சிறிது.

செய்முறை:

சம்பா கோதுமையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து மசிய அரைத்து ஒரு மெல்லிய சுத்தமான துணியில் வடிகட்டி, பால் எடுக்கவும். அந்தப் பாலை 8 மணி நேரம் பாத்திரத்தில் அப்படியே வைத்திருக்கவும். அடியில் கெட்டியாக தங்கி, நீர் மேலே தெளிந்து நிற்கும். அந்த நீரை எடுத்து விடவும். கோதுமைப் பாலில் சர்க்கரை சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கரண்டியில் ஒட்டும் போது கலர் பவுடர் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் வறுத்து உடைத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். ருசியான கோதுமை அல்வா ரெடி.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?