- அஜித்
- சென்னை
- ரஜினிகாந்த்
- ஆர். கிருஷ்ணமூர்த்தி
- பிரியா
- எம். எஸ். விஸ்வநாதன்
- விஷ்ணுவர்தன்
- அஜித் குமார்
- நயன்தாரா
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரியா நடிப்பில் கடந்த 1980ல் வெளியாகி ஹிட்டான படம், ‘பில்லா’. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். இப்படத்தை விஷ்ணுவர்தன் அதே பெயரில் ரீமேக் செய்து இயக்கினார். அஜித் குமார், நயன்தாரா நடித்தனர். இது கடந்த 2007ல் திரைக்கு வந்தது. அப்போது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற இப்படம், வரும் மே 1ம் தேதி, அஜித் குமாரின் 53வது பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. ஜிபி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அரவிந்த் சுரேஷ் குமார், டாக்டர் ஞானபாரதி ஆகியோர், ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் தமிழ்நாட்டில் 150 தியேட்டர்களில் வெளியிடுகின்றனர்.
விஷ்ணுவர்தனின் ஸ்டைலான மேக்கிங்கில் இரு வேடத்தில் அஜித் குமார் நடித்திருந்தார். மற்றும் நயன்தாரா, பிரபு, ரஹ்மான், நமீதா, சந்தானம் நடித்திருந்தனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். தற்போது விஜய்யின் ‘கில்லி’ படம் 20 வருடங்களுக்குப் பிறகு ரீ-ரிலீசாகி வெற்றிபெற்றுள்ள நிலையில், அஜித் குமாரின் படமும் ரீ-ரிலீசாவது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.