×

நபிகள் குறித்து அவதூறு கருத்து பாஜவினர் 2 பேரை கைது செய்ய திமுக வலியுறுத்தல்

சென்னை: நபிகள் பெருமான் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜ செய்தி தொடர்பாளர்களை கைது செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. திமுக சிறுபான்மையினர் நலவுரிமை பிரிவு செயலாளர் த.மஸ்தான் வெளியிட்ட அறிக்கை: அண்ணல் நபிகள் பெருமான் குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த பாஜவின் செய்தி தொடர்பாளர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும். பொறுப்பற்ற வகையில் செய்யப்படும் இதுபோன்ற வெறுப்பு விமர்சனங்கள் சமூகத்தில் அமைதியை மட்டுமல்ல, எதிர்காலத்துக்கே கேடு விளைவிப்பவை. அவர்கள் இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பாஜ தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது. சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என்பதை திமுக சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post நபிகள் குறித்து அவதூறு கருத்து பாஜவினர் 2 பேரை கைது செய்ய திமுக வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Dajagam ,Chennai ,Prophet ,Peruman ,Baja ,Dezagam ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு