சென்னை: தற்போது தமிழ்ப் படவுலகில் புதிய படங்களுக்கு நிகராக, ஏற்கனவே வெளியாகி ஹிட்டான முன்னணி ஹீரோக்களின் பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர்களின் ஆதரவுடன் வசூலிலும் சாதனை படைத்து வருகின்றன. அந்த வரிசையில் ஹாலிவுட் படமும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த 2014ல் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உலகம் முழுக்க ரிலீசான அறிவியல் சார்ந்த கற்பனைக் கதை கொண்ட படம், ‘இன்டர்ஸ்டெல்லர்’. இதில் மேத்யூவ் மெக்கானாகே, அன்னி ஹாத்வே, ஜெஸிகா சாஸ்டைன், பில் இர்வின் நடித்திருந்தனர்.
இந்த பூமி மனிதர்கள் வாழ்வதற்கு சிறிதும் தகுதியற்ற நிலைக்கு ஆளாகிவிட, புதிய கிரகத்தை தேடிச்செல்லும் விண்வெளி சாகசப் பயணம்தான் கதை. இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நெருங்கியுள்ளதை தொடர்ந்து, வரும் செப்டம்பர் 27ம் தேதி மீண்டும் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதாக பாரமவுண்ட் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
The post தமிழ் படங்கள் பாணியில் ஹாலிவுட் படம் ரீ-ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.