×

ஓடும் காரில் தீ விபத்து சிகிச்சை பலனின்றி தொழிலதிபர் சாவு

அண்ணாநகர்: முகப்பேர் ஜீவன் பிமா நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கணேசன் (47). இவர், கடந்த 5ம் தேதி சென்னை திருமங்கலத்திலிருந்து, அண்ணாநகரில் உள்ள தனது உறவினரான அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணா வீட்டிற்கு சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காரில் தீவிபத்து ஏற்பட்டது. மேலும், கதவின் ஸ்மார்ட் லாக் எதிர்பாராதவிதமாக பூட்டிக்கொண்டது. இதனால், கணேசன் காரில் சிக்கினார். கார் தீப்பற்றி எரிந்ததால், தீயில் சிக்கிய அவர் படுகாயமடைந்தார். தகவலறிந்த திருமங்கலம்  போலீசார் மற்றும்  ஜே.ஜே.நகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் சடலத்தை மீட்டு, அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்….

The post ஓடும் காரில் தீ விபத்து சிகிச்சை பலனின்றி தொழிலதிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Jeevan ,Ganesan ,Bima Nagar ,Chennai ,Dinakaran ,
× RELATED நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு போலீஸ் சம்மன்