×

ரேஷன் கடையில் ஆய்வு அரிசி சிதறி கிடந்ததால் விற்பனையாளர் சஸ்பெண்ட்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

அணைக்கட்டு: ஊசூர் அருகே ஆய்வின்போது, ரேஷன் கடையில் அரிசி சிதறிக்கிடந்ததால் விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் சில ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊசூர் சுற்றியுள்ள பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் மற்றும் வழங்கல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் தரமற்ற அரிசி திரும்ப பெறப்பட்டு வேறு அரிசி வழங்கப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் ரேஷன் கடையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ நந்தகுமார் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ரேஷன் அரிசி சிதறி கடைக்கு வந்தவர்கள் காலில் மிதிப்பட்டு கிடந்தது. அதுகுறித்து அவர்கள் கடை விற்பனையாளரிடம் கேட்டபோது, அரிசி வாங்கி சென்றவர்களால் சிதறியதாக பதிலளித்தார். இதுபோல் நடக்காமல் இருக்க கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் எம்எல்ஏ கேட்டுக் கொண்டார். கலெக்டர் கூட்டுறவு துறை அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் கூட்டுறவு துறை அதிகாரிகள் கோவிந்தரெட்டி பாளையம் கடை விற்பனையாளர் பழனியை சஸ்பெண்ட் செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கை மற்ற ரேஷன் கடை விற்பனையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

The post ரேஷன் கடையில் ஆய்வு அரிசி சிதறி கிடந்ததால் விற்பனையாளர் சஸ்பெண்ட்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Osur ,Vellore District Dampakkudu Thaluga ,Dinakaran ,
× RELATED தமிழகத்தின் பெங்களூரு என்று...