×

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

மதுராந்தகம்:  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் சிவில் துறை சார்பாக ரெயின் செட் 22 என்ற ஒரு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கு கல்லூரி வளாக கலையரங்கில் நேற்று காலை 10 மணியளவில் தொடங்கியது. கல்லூரியின் தாளாளர் முனைவர் கோ.ப செந்தில்குமார் தலைமை தாங்கினார்.கல்லூரியின் முதல்வர் ஜெ.ராஜா, டீன்  வா.ராமசாமி, சிவில் துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தனியார் நிறுவன பொது மேலாளர் வி.எஸ்.சக்திவேல் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.  தனியார் நிறுவன மேலாளர் ரமேஷ் குமார்  பேசுகையில், 3 முதல் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பிரிவில் நீங்கள் மிகச்சிறந்த மேலாண்மை செய்பவராக விளங்கினால் இந்த உலகம் உங்கள் கைவசம் ஆகும்’ என்றார். நிகழ்ச்சியின்போது,  பொறியியல் மாணவர்களுக்கான தொழில்நுட்ப வினாடி வினா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை கல்லூரி முதல்வர் ஜெ.ராஜா வழங்கினார். இதில்,  தனியார் நிறுவன அதிகாரி ராஜபாண்டி, ரத்தினகுமார், கார்த்திக்குமார் மற்றும் 250க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  …

The post ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Adhiparasakthi Engineering College ,Madurandakam ,Civil Department of Engineering College ,Mellmaruvathur Atiparashakti Engineering College ,Adhiparashakti Engineering College ,Dinakaran ,
× RELATED குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று...