×

செல்போனுக்கு அடிமையான பிளஸ் 1 மாணவி தற்கொலை: மதிப்பெண் குறைந்ததால் விபரீத முடிவு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே நாவாயிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயமோகன். இவரது மனைவி ஸ்ரீஜா. ஜெயமோகன் ஏற்கனவே இறந்து விட்டார். ஸ்ரீஜா திருவனந்தபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஜீவா மோகன் (16) மற்றும் ஜிதா மோகன் (12) என்ற 2 மகள்கள் உள்ளனர். ஜீவா மோகன் அருகிலுள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கொரோனா காலத்திற்கு பின்னர் ஆன்லைனில் படிப்பதற்காக ஜீவா மோகனுக்கு தாய் ஸ்ரீஜா செல்போன் வாங்கி கொடுத்திருந்தார்.நாளடைவில் ஜீவா மோகன் செல்போனுக்கு அடிமையானார். எந்த நேரமும் இவர் யூடியூப் பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஏ பிளஸ் மதிப்பெண்கள் வாங்கிய ஜீவா மோகனால், பிளஸ் 1 தேர்வில் குறைந்த மதிப்பெண்களே எடுக்க முடிந்தது. இது அவருக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவத்தன்று ஜீவா மோகனின் அறை நீண்ட நேரமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது ஜீவா மோகன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது தெரியவந்தது. கல்லம்பலம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஜீவா மோகன் தற்கொலைக்கு முன்பு எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது. அதில் செல்போனுக்கு அடிமையானதால் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தங்கை ஜிதாவுக்கு செல்போன் கொடுக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜீவா ேமாகன் கொரிய நாட்டை சேர்ந்த இசை ஆல்பத்தை அடிக்கடி பார்த்து வந்தது தெரியவந்தது….

The post செல்போனுக்கு அடிமையான பிளஸ் 1 மாணவி தற்கொலை: மதிப்பெண் குறைந்ததால் விபரீத முடிவு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Jayamohan ,Navaikkulam ,Sreeja ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!