×

திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நிறைவு

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், கூளூர் ஊராட்சிக்குட்பட்ட மாவூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோயிலில் நடப்பு ஆண்டிற்கான தீமிதி விழா கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம், மகா பாரத சொற்பொழிவு, இரவில் நாடகமும் நடந்தது. மேலும் கடந்த மாதம் 29ம் தேதி திரவுபதியம்மன் திருமணம், 30ம் தேதி சுபத்திரை திருமணமும் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், பெண்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6:30 மணிக்கு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். இரவு 8 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், நேற்று தர்மர் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். அதேபோல் திருத்தணி நகராட்சி அமிர்தாபுரம் பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோயிலிலும் நேற்று முன்தினம் இரவு தீமிதி விழா நடந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். தொடர்ந்து உற்சவர் அம்மன் வீதியுலாவும், வாணவேடிக்கையும் நடந்தது….

The post திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நிறைவு appeared first on Dinakaran.

Tags : Dimithi festival ,Draupadiyamman temple ,Dimiti ,Mavur ,Tiruvalangadu Union ,Koolur Panchayat ,Dimiti festival ,Dirupadiyamman temple ,
× RELATED இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா