×

வண்ண காகிதத்தை பயன்படுத்தி 1505 வண்ணத்துப்பூச்சிகள் வடிவமைப்பு

ஆவடி: ஆவடி சேக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீநாத் – வகிதா தம்பதியர். இவர்களது மகன் சாய் மித்ரன்(8),  தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் வண்ண காகிதங்களை கொண்டு சுமார் 1505 வண்ணத்து பூச்சிகளின் உருவங்களை தயாரித்துள்ளான். கடந்த மாதம் 22ம் தேதி முதல் சிறுவன் நாளொன்றுக்கு 300 முதல் 400 வரை வண்ணத்துப்பூச்சி உருவங்களை தயாரித்துள்ளான். கிட்டத்தட்ட 5 நாட்களில், 1505 வண்ணத்து பூச்சி மாதிரிகளை தயாரித்த சாய் நித்ரனுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில்  பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, நேற்று காலை யூனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்டு மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகள் மாணவன் சாய் மித்ரனுக்கு சாதனை சான்றிதழ்கள் மற்றும் கேடயம் உள்ளிட்டவை வழங்கின. இதுகுறித்து, தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட சாய் மித்ரன் இந்த சாதனைகளை படைக்க உறுதுணையாக இருந்த பெற்றோருக்கு நன்றி தெரிவித்ததோடு, கின்னஸ் சாதனைக்கு தயாராகி வருவதாகவும் மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரிடமும் பரிசு பெற விரும்புவதாகவும் தெரிவித்தான்….

The post வண்ண காகிதத்தை பயன்படுத்தி 1505 வண்ணத்துப்பூச்சிகள் வடிவமைப்பு appeared first on Dinakaran.

Tags : Awadi ,Srinath ,Vakita ,Awadi Sekkkam ,Sai Mithran ,Dinakaran ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!