×

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

பெரம்பூர்: அயனாவரம் தேவராஜ்லு தெருவை சேர்ந்தவர் ஆன்ரோ ஜான் (47). காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது தங்கை எலிசபெத் வீட்டில் கடந்த ஒரு மாதமாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்து படுத்து உறங்கியவர் நேற்று காலை 5 மணியளவில் வீட்டிலிருந்து கழிவறைக்குச் சென்று விட்டு மாடிப்படியில் இருந்து கீழே இறங்கும் போது போதையில் கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் தலையில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து, இறந்துவிட்டதாக தெரிவித்தனர். …

The post மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Perampur ,Ayanavaram ,Devarajlu Street ,Anro John ,
× RELATED தனது வீட்டு மாடியில் இருந்து பக்கத்து...