×

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா

மதுராந்தகம்: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தனியார் நிறுவனம் சார்பில்   இயற்கையை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சாத்தமை கிராமம் உள்ளது. இங்கு,  உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இயற்கையை பாதுகாக்கும் வகையில் பூவரசன், புங்கன்,  நாவல், வேம்பு, மா, நெல்லி உள்ளிட்ட 10 வகையான நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி  நடந்தது. இதில், தனியார் நிறுவனம் சார்பில் சாத்தமை கிராமத்தில் நேற்று காலை நடந்தது.  இந்த நிகழ்ச்சிக்கு, அதன்  தலைமை அதிகாரி ஜாய் தலைமை தாங்கினார். மனிதவள மேம்பாட்டு அலுவலர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.  தர நிர்ணய அலுவலர் யோகேஷ் ஜோஷி அனைவரையும் வரவேற்றார். மேலும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வனச்சரகர் ரூபஸ் லெஸ்லி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மரக்கன்றுகள் நட்டு துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். இதில்,  தனியார் நிறுவன ஊழியர்கள், வனத்துறை அதிகாரிகள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து,  மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக ரூ 10 லட்சம் மதிப்பில் மதுராந்தகம் நகராட்சியுடன்  இந்த தனியார் நிறுவனத்தின் நிதி ரூ 3.33 லட்சம் பங்களிப்புடன் குடிநீர் வழங்குவதற்காக சுத்திகரிப்பு இயந்திரம் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மதுராந்தகம் நகரமன்ற தலைவர் மலர்விழி தொடங்கி வைத்தார்.  நகராட்சி ஆணையர் அருள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அந்த தனியார் நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டனர். …

The post உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Sapling Planting Ceremony ,World Environment Day ,Madhurandhakam ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED மரக்கன்றுகள் நடும் விழா