×

மாடம்பாக்கம்-தைலாவரம் வரை குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்திலிருந்து வள்ளலார் நகர வழியாக தைலாவரம் வரை செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் கொண்ட யூனியன் சாலை உள்ளது. குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இச்சாலை, கடந்த 2016ம் ஆண்டு ரூ 38 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டது. இது, தரமற்ற முறையில் போடப்பட்டதால், சில மாதங்களிலேயே சேதமடைந்தது. இதனால், கடந்த 5ஆண்டுகளாக குண்டும், குழியுமாக, சேறும், சகதியுமாகவும் சீர்கெட்டும் அந்த சாலை காணப்படுகிறது.இதனால், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், மாற்றுதிறனாளிகள், வேலைக்கு சென்று வருவோர் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதில், பைக்கில் செல்பவர்கள் பள்ளம், மேட்டில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் அடிக்கடி பழுதாகியும் விடுகிறது. எனவே, மாடம்பாக்கத்திலிருந்து வள்ளலார் நகர் வழியாக தைலாவரம் வரை செல்லும் சுமார் 2கிலோ மீட்டர் கொண்ட இந்த சாலையை,சீரமைக்க மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலையிட்டு போர்க்கால அடிப்படையில் சீர் செய்து அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   …

The post மாடம்பாக்கம்-தைலாவரம் வரை குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madambakkam-Thailavaram ,Guduvancheri ,Madambakkam ,Thalivaram ,Vallalar ,Madambakkam-Thilavaram ,Dinakaran ,
× RELATED கூடுவாஞ்சேரி பெட்ரோல் பங்க் வாசலில்...