×

8 போர்கப்பல் உள்பட ரூ76,000 கோடியில் ஆயுத கொள்முதல்: பாதுகாப்புஅமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: நவீன போர்கப்பல், ஆயுத தளவாடங்கள் வாங்க ரூ76,390 கோடிக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு தளவாடங்கள் கையகப்படுத்துதல் கவுன்சிலின் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த ரூ76,390 கோடி மதிப்பிலான நவீன போர்க்கப்பல்கள், உபகரணங்கள், ஆயுத தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்தொகையில் இருந்து 8 நவீன அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள் ரூ36,000 கோடி மதிப்பில் வாங்கப்பட உள்ளன. இந்த போர்க்கப்பல்கள் கண்காணிப்பு ரோந்து பணி, பாதுகாப்பு நடவடிக்கைகள், தேடுதல், தாக்குதல் மற்றும் கடலோர பாதுகாப்பு போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன.இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் டோர்னியர் விமானம், எஸ்யு-30 எம்கேஐ விமான இயந்திரங்கள் தயாரிக்கவும் இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்திய ராணுவத்திற்காக போர்க் லிப்ட் டிரக்குகள், பாலம் அமைக்கும் தொட்டிகள், சக்கரத்துன் கூடிய கவச போர் வாகனங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  பாதுகாப்புத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அரசின் நோக்கத்திற்கு ஏற்ப டிஜிட்டல் கடலோர காவல்படை உருவாக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது….

The post 8 போர்கப்பல் உள்பட ரூ76,000 கோடியில் ஆயுத கொள்முதல்: பாதுகாப்புஅமைச்சகம் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Ministry of Defence ,New Delhi ,Union Defence ,Minister ,Rajnath ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...