×

சேலம் விவிஐபிக்கு எச்சரிக்கை மணி அடித்த பெல் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘உறவாடி கெடுக்கும் தாமரை தலைமையால் அதிர்ச்சியில் இருப்பது யாருன்னு சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சின்னமம்மியின் தயவால் முதல்வரானார் சேலம் விவிஐபி. இவரது உதவியாளராக 20 ஆண்டுகள் இருந்த பெல் என்பவர், சேலம் விவிஐபியின் நெருக்கத்தை பயன்படுத்தி, வேலை வாங்கித்தருவதாக பல ‘சி’க்களை அள்ளினாராம். ஆனால், அவர் கொடுத்த வேலைக்கான மனுக்களையும் சேலம் விவிஐபி கண்டுக்கொள்ளாமல் குப்பையில் போட்டுவிட்டாராம். அதனால்தான் அரசு வேலை கேட்ட பலரிடம் பணம் வாங்கியும் வேலையும் வாங்கி தர முடியவில்லை. பணத்தையும் திரும்பி தர முடியவில்லை. சேலம் விவிஐபிக்கும் அந்த பணத்துல வரவேற்பு, கவனிப்பு, வீட்டு வேலைகளுக்கு என்று சில லகரங்களை அள்ளி வீசினாராம். ஆனால், அவரையும், அவரது  மனுக்களும் குப்பைக்கு போனதால், சேலம் விவிஐபியின் மாஜி உதவியாளர் பெல் ஜெயிலுக்கு போனாரு. இப்ப பிரச்னையே அது இல்ல. தன் மனுவை குப்பையில் போட்ட சேலம் விவிஐபியை நடுங்க வைக்கும் தகவல் ஒன்றால் கையை பிசைந்து கொண்டு இருக்கிறாராம் அவர். காரணம் தனக்காக ஜெயிலுக்கு போன பெல்லை, மாஜி பெயில்ல எடுக்க எந்த டிரையும் பண்ணலையாம். இதனால சிறையில் சதம் அடித்தாராம். இதனால கோபத்தில் இருந்த மாஜி பிஏ, மாஜியையும் அவரது நிழலையும் தனது கன்ட்ரோலுக்குள்ள கொண்டுவர பிளான் பண்ணினாராம். அப்போது அவர் கூறியதாவது, ‘அன்னைக்கு காலையில ஆறு மணி இருக்கும். வெள்ள சட்டையும் காக்கி பேன்டும், கருப்பு பேண்டும் ரோஸ் கலர் சட்டையும் போட்டுக்கிட்டு ரெண்டு பேரு ஜெயிலுக்குள்ள என்ன பாக்க வந்தாங்க. அவங்கள பாக்கும்போது டெல்லி உளவுப்பிரிவு அதிகாரிகள் போல தெரிஞ்சது. அவங்க ரெண்டு மணி நேரமா விசாரிச்சாங்க. குறிப்பா சேலம் விவிஐபி, உங்கள பத்தியும் தொளைச்சி தொளைச்சி கேள்வி கேட்டாங்க. ஆனா நான் வாயே திறக்கலையே. என் உசுரே போனாலும் நான் உங்களை காட்டிக்கொடுக்க மாட்டேன்’’னு நிழல்கிட்ட சொல்லியிருக்காரு. இதனால ஆடிப்போன நிழல், இத எதுக்கு இப்ப நம்மகிட்ட சொல்றான். எதுவும் உளறிருப்பானோ. எந்த நேரத்திலும் எதுவும் நடந்துருமோன்னு பயத்துல இருக்காராம். இதை அப்படியே சேலம் விவிஐபிக்கு பாஸ் செய்தாராம்… நம்மகிட்ட உறவாடிக்கிட்டே நம்மள பத்திய ரகசியத்தை சேகரிக்கிறாங்க என்று தாமரையை பற்றி நினைச்சாலே கடுப்பாக இருக்கு என்று அடிப்பொடிகளிடம் சொன்னாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘எங்கே போஸ்ட் போட்டாலும் பிரச்னை செய்யும் ஆசாமி யாரு…’’ என விசாரித்தார் பீட்டர் மாமா.‘‘குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வருகின்ற ஊராட்சி ஒன்றின் செயலராக பணியாற்றி வருபவரை கண்டு அதிகாரிகளே மிரண்டு போயுள்ளார்களாம். இவர் பணி மாறி செல்லும் இடங்களில் எல்லாம் தலைவருடன் மோதல் போக்கை கடைபிடிப்பதாலும், தலைவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு முரணாக செயல்படுவதாலும் இதுவரை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பல ஊராட்சிகளிலும் இவர் இடமாறுதல் செய்யப்பட்ட போதிலும் இவர் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதே இல்லை. இதனால் இவருக்கு உத்தரவிட வேண்டிய நிலையில் உள்ள உயர் அதிகாரிகளும் இவரிடம் பணிந்து கெஞ்சுகின்ற நிலை உள்ளது. ஒரு சில அதிகாரிகளுக்கு எடுபிடி பணிகளை செய்து இவர் அவர்களின் ஆதரவுடன் ஆடும் ஆட்டம் தொடருவதால் ஊராட்சி தலைவர்கள் செய்வதறியாது திகைத்துப்ேபாய் உள்ளனர். இது குறித்து மாவட்டத்தின் உயரதிகாரிக்கு பலர் லெட்டர் அனுப்பி இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘விழுப்புரம் மாஜி அமைச்சருக்கு ஏன் டோஸ் விழுந்தது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ சட்டமன்றத்தேர்தலில் படுதோல்வியடைந்த இலை கட்சியின் திண்டிவனத்தைச் சேர்ந்த மாஜி மந்திரி, எப்படியாவது போராடி ராஜ்யசபா எம்பியாகியிருக்கிறாராம். நேற்று முதன்முறையாக விழுப்புரம் வருகை தந்த அவருக்கு, சகோதரர் ஏற்பாட்டில் தடபுடல் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்களாம்.சாலையோரம் கட்சிக்கொடிகளும், பேனர்களும் வைத்து அமர்க்களப்படுத்தியிருந்தார்களாம். மேலும், நகரத்தில் கெத்துகாட்டுவதற்கு, சாலையில் உள்ள சிலைகளுக்கும் மாலைஅணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். அதன்படி, காலையில் கட்சிஅலுவலகத்திற்கு வந்த எம்பிக்கு வழிகெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டதாம். இதனிடையே, கட்சித்தலைமையிலிருந்து போன்வந்ததும், வரவேற்பு நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்துவிட்டு தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ஆஜரானாராம். பழம் கட்சி எம்எல்ஏக்கள் தயவால் நாம் ராஜ்யசபா சீட்டுபெற்றிருக்கிறோம். அவரது மாவட்டத்திற்குள் செல்லும்போது, தோட்டத்திற்கு சென்று பார்க்காமல், கெத்துக்காட்ட சென்றதாக எம்பிக்கு கட்சித்தலைமையிலிருந்து சரமாரி டோஸ்விடப்பட்டதாம். அதன்பிறகுதான், வரவேற்பை பாதியிலே முடித்துவிட்டு தைலாபுரம் தோட்டத்திற்கு ஆஜரானாராம்.இதனால், நீண்ட நேரம் காத்திருந்த இலைகட்சி நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றார்களாம்… எல்லாம் சேலம் விவிஐபியின் ஸ்டிராங்க் டோஸ் தான் காரணமாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post சேலம் விவிஐபிக்கு எச்சரிக்கை மணி அடித்த பெல் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem ,Bell ,Peter ,Chinnamammy ,Daya ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை