×

உத்திரமேரூர் அருகே வளர்ச்சி பணிகள் ஆய்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதுபோல் திணையாம்பூண்டி கிராமத்தில் அங்கன்வாடி மையக்கட்டிடம், சிறுபினாயூர் கிராமத்தில் மேம்பாலப்பணி, ஆணைப்பள்ளம் கிராமத்தில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம், காரணை கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளிட்ட பல்வேறு அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.இந்த பணிகளை மாவட்ட கூடுதல் ஊரக வளர்ச்சி  இயக்குனர் (சாலை மற்றும் பாலங்கள்) சுமதி  மற்றும் திட்ட இயக்குனர் தேவி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கட்டிடங்களின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகுமார், வரதராஜன், பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், பணி மேற்பார்வை யாளர்கள் உடனிருந்தனர்….

The post உத்திரமேரூர் அருகே வளர்ச்சி பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Uttramerur ,Utramerur ,Alanandanthalam ,Utrameru ,Ananganwadi Centre ,Green ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக தொடரும் இருதரப்பு...