×

டொமினிக்கன் குடியரசில் பதற்றம்!: நெருங்கிய நண்பராலேயே அலுவலகத்தில் வைத்து அமைச்சர் சுட்டுக்கொலை..!!

சண்டோ டொமினிக்கோ: டொமினிக்கன் குடியரசில் அமைச்சர் ஒருவர் தனது அலுவலகத்தில் வைத்து நெருங்கிய நண்பராலேயே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரீபியன் தீவு நாடுகளில் டொமினிக்கன் குடியரசு நாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் ஓர்லாண்டோ ஜோர்ச் மீரா. திங்களன்று இவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் திங்கட்கிழமை பிற்பகல் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், மிகுவல் ஃகுருஸ் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கூறினார். குருஸ் அமைச்சரின் குழந்தைப்பருவ நண்பர் என்றும் தெரிவித்தார். மீரா 35 வயதான வழக்கறிஞர், 2002 முதல் 2006 வரை பதவியில் இருந்த முன்னாள் அதிபர் சால்பட்டா ஜார்ஜ் பிளக்கோவின் மகன் ஆவார். அவருக்கு பார்டிசியா செல்மா மில்கோலஸ் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஓர்லாண்டோ ஒரு வழக்கறிஞர் மற்றும் நவீன புரட்சிகர கட்சியில் உறுப்பினராக இருந்தவர். இவர் கடந்த ஆகஸ்ட் 2020ல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். …

The post டொமினிக்கன் குடியரசில் பதற்றம்!: நெருங்கிய நண்பராலேயே அலுவலகத்தில் வைத்து அமைச்சர் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Dominican Republic ,Santo Dominico ,Dinakaran ,
× RELATED முகப்பருக்கள் உணர்த்தும் பிரச்னைகள்!