×

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார். தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தலமை செயலாளர் இறையன்பு நேற்று நேரில் ஆய்வு செய்தார். முதலில் அனகாபுத்தூர் மற்றும் பம்மல் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து அனாகபுத்தூர் அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் மரக்கன்று வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றினை நட்டு வைத்தார். பின்னர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் புதிய தினசரி அங்காடிகட்டும் பணியையும், பம்மல் பகுதியில் ரூ.99.50 லட்சம் மதிப்பீட்டில் திருப்பனந்தாள் ஏரி புனரமைப்பு பணியையும், சித்தாலப்பாக்கம் சாலையில் ஜிடி நாயுடு தெருவில் மூடிய வடிகால் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை தரம் பிரிப்பதற்காக செம்பாக்கத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நுண்ணியிர் உரமாக்கும் மையத்தில் கழிவுகளை தரம் பிரித்து உரமாக்கும் பணியையும், சேலையூர் சுடுகாடு வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், தாம்பரம் மாநகர நல அலுவலர் பார்த்திபன், கண்காணிப்பு பொறியாளர் பாண்டுரங்கன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்….

The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Thambaram Corporation ,Chennai ,Tambaram ,Tamparam Corporation ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...