×

கும்மிடிப்பூண்டி அருகே பெட்ரோல் ஊற்றி 5 பைக்குகள் எரிப்பு: மர்ம நபருக்கு வலை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (42). தம்புரெட்டிபாளையம் சாலை பகுதியில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். பழுதுபார்க்க வந்த பைக்குகளை கடைக்கு வெளியில் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 பைக்குகளும் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்த வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் 5 பைக்குகளும் தீயில் எரிந்து எலும்புக்கூடாது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை அருகேயுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தபோது, நேற்று அதிகாலை மர்ம நபர் பைக்குகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பியது தெரியவந்தது. மேலும் பைக்குகளுக்கு தீவைத்து எரித்தவருக்கும், குமாருக்கும் முன்விரோதம் உள்ளதா? அல்லது பைக் பழுது பார்ப்பதில் தகராறு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post கும்மிடிப்பூண்டி அருகே பெட்ரோல் ஊற்றி 5 பைக்குகள் எரிப்பு: மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Gummipipundi ,Kumar ,Kummippundi ,Wheeler ,Thamburettipolayam Road Area ,Gummipiondi ,Dinakaran ,
× RELATED மோடி மீண்டும் முதல்வராவார்’...