×

சேவூர் கிராமத்தில் உயர்மட்ட கால்வாய் மேம்பாலம்

செய்யூர்: சேவூர் கிராமத்தில் ரூ1.95 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட கால்வாயில் மேம்பாலம் அமைப்பதற்கான பணியை, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் சேவூர் – செம்பூர் கிராமங்கள் இடையே செல்லும் சாலையில் ஏரிகளின் உபரி நீர் செல்லும் உயர்மட்ட கால்வாய் மேம்பாலம் உள்ளது. இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக உடைந்து சேதமடைந்தது. இதனால் கல்குளம், சேவூர், செம்பூர், வடக்கு வாயலூர், நெல்வாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சென்றுவர சிரமப்பட்டனர். மேலும், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்தும் தடைப்பட்டு வந்தது. இந்நிலையில், மேம்பாலத்தை அகற்றி விட்டு புதிதாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால், நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ1.95 லட்சத்தில் மேம்பாலம் கட்டுமானப்பணிக்கு நேற்று அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு, ஒன்றிய வடக்கு செயலாளர் ராமச்சந்திரன், லத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு, ஒன்றியக்குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமிமகேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் காளி, ஊராட்சி மன்ற தலைவர் மலர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…

The post சேவூர் கிராமத்தில் உயர்மட்ட கால்வாய் மேம்பாலம் appeared first on Dinakaran.

Tags : Sewur village ,Seyyur ,Kanchipuram South District ,Saveur village ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கிராம...