×

ரஷ்ய விமானம் விவகாரம் பிரதமர் ரணில் விளக்கம்

கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 191 பயணிகள், 13 விமான ஊழியர்களுடன் கடந்த 2ம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு புறப்பட இருந்த ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த விவகாரம், இலங்கை, ரஷ்யா உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ரஷ்யாவின் கடன் வழங்கும் திட்டமும் ரத்தாகும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இது குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ரஷ்ய அரசுக்கு விளக்கம் அளித்துள்ளார். கொழும்பு வணிக விவகார உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே, விமானம் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், இது தனிபட்ட சட்ட விவகாரமே தவிர, அரசாங்கங்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கை இல்லை என்றும் ரணில் கூறி உள்ளார். விமானம் தடுக்கப்பட்டதற்காக அதிலிருந்த பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக இலங்கை விமானத்துறை அமைச்சர் நிமல் பால டிசில்வா கூறி உள்ளார். …

The post ரஷ்ய விமானம் விவகாரம் பிரதமர் ரணில் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Ranil ,Colombo International Airport ,
× RELATED மக்களின் ஆதரவு இருந்ததால் பொருளாதார...