×

கோவையில் போலீஸ்காரரால் தாக்கப்பட்ட உணவு டெலிவரி ஊழியருக்கு செல்போனில் டிஜிபி ஆறுதல்

கோவை: கோவை நீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (27). தனியார் உணவு டெலிவரி நிறுவன ஊழியர். இவர் தனது மொபட்டில் அவினாசி ரோட்டில் சென்றபோது சாலையின் குறுக்கே சென்ற இளம்பெண்  மீது தனியார் பள்ளி வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதை பார்த்த மோகனசுந்தரம்,  பஸ் டிரைவரை வழிமறித்து, கண்டித்துள்ளார். அங்கே பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் சதீஷ்,  மோகனசுந்தரத்தை மடக்கி கன்னத்தில் அறைந்து செல்போன், மொபட் சாவி, ஹெட் போன் போன்றவற்றை பறித்துள்ளார்.இதை அந்த பகுதியில் இருந்த ஒருவர் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக மோகனசுந்தரம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து  போலீஸ்காரர் சதீஷ் உடனடியாக  கைது செய்யப்பட்டார். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இந்த நிலையில் மோகனசுந்தரத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு செல்போனில் தொடர்பு கொண்டு ‘‘நான்  பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு ஸ்டேசனரி கடை நடத்தி  வந்தேன். கொரோனா பரவல் காரணமாக வியாபாரம் முடங்கியது. வேறு  வழியின்றி உணவு டெலிவரி செய்யும் தொழிலுக்கு வந்துவிட்டேன். என் கண் முன்பே  பஸ் டிரைவர் தவறு செய்தார். அதை தட்டி கேட்டபோதுதான் போலீஸ்காரர் என்னை தாக்கிவிட்டார்’’ எனக் கூறினார். அவருக்கு டிஜிபி ஆறுதல் கூறினார். இது பற்றி மோகனசுந்தரம் கூறும்போது, ‘‘டிஜிபியின் ஆறுதல்  எனக்கு மகிழ்ச்சியளித்தது’’ என்றார்….

The post கோவையில் போலீஸ்காரரால் தாக்கப்பட்ட உணவு டெலிவரி ஊழியருக்கு செல்போனில் டிஜிபி ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : DGP ,Coimbatore ,Mohanasundaram ,Nilambur ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...