×

புதிய வைரஸ்களின் கூடாரமாகும் கேரளா… ஸிகா வைரஸ், தக்காளி வைரஸ், வெஸ்ட் நெல்-ஐ தொடர்ந்து 2 சிறுவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி!!

திருவனந்தபுரம் : உலகில் உருவாகும் புதிய வைரஸ் நோய்களின் இந்திய இறங்குதளமாக கருதப்படும் கேரளாவில் நோரோ என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தலைநகர் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் என்ற இடத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவருமே தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். கேரளாவில் கடந்த ஒரு மாத காலமாக வெஸ்ட் நெல் என்ற புதிய வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்த வெஸ்ட் நெல் வைரஸ், 2006ம் ஆண்டு ஆலப்புழாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 2011ல் எர்ணாகுளத்தில் மீண்டும் பதிவானது. இந்த நிலையில் 2019ம் ஆண்டு மலப்புரம் மாவட்டத்தில் வெஸ்ட் நெல் வைரசுக்கு 6 வயது சிறுவன் மரணம் அடைந்தான். தற்போது கடந்த மே 30ம் தேதி வெஸ்ட் நெல் வைரசால் 47 வயது நபர் மரணம் அடைந்தார். இப்பொது நோரோ என்ற புதிய வகை வைரஸ் மிரட்டி வருகிறது. ஏற்கனவே கேரள மாநிலத்தில் நிபா வைரஸ், ஸிகா வைரஸ், தக்காளி வைரஸ் , ஷிகெல்லா வைரஸ், பறவைக் காய்ச்சல், எலிக்காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் வரிசை கட்டி தாக்கியுள்ளன. கொரோனா தொற்றும் கேரளாவில் தான் முதலில் வந்து இறங்கியது. அந்த வரிசையில் நோரோ வைரஸ் என்ற புதிய வைரஸ் களமிறங்கி இருப்பது கேரள மக்களை பீதி அடைய வைத்துள்ளது. பெரும்பான்மையான மக்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் கேரள மாநிலம் புதிய வைரஸ் நோய்களின் இந்திய தொற்றுவாயாக மாறியுள்ளது.  …

The post புதிய வைரஸ்களின் கூடாரமாகும் கேரளா… ஸிகா வைரஸ், தக்காளி வைரஸ், வெஸ்ட் நெல்-ஐ தொடர்ந்து 2 சிறுவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,India ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...