×

கோட் டில் என்ன கேரக்டர்: பிரசாந்த் பதில்

சென்னை: விஜய்யுடன் இணைந்து நடிக்கும் ‘கோட்’ படத்தில் என்ன கேரக்டர் என்பதற்கு பதிலளித்தார் பிரசாந்த். பிரசாந்த் தனது பிறந்த நாளை நேற்று கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது அவர் கூறியதாவது: எனது ரசிகர் மன்றங்கள் மூலமாக தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் அளித்து வருகிறேன். பாதுகாப்பான பயணத்துக்கு ஹெல்மட் மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தவே இதை செய்கிறோம். தேர்தல் நேரம் என்பதால், வாக்களிக்க யாரும் மறந்துவிட வேண்டாம்.

ஒவ்வொருவரும் உங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். விஜய்யுடன் ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறேன். இதில் வலுவான கேரக்டரில் விஜய்க்கு துணையாக நடிக்கிறேன். இதற்கு மேல் இந்த படம் பற்றி பேச முடியாது. படம் வந்தால் ரசிகர்களுக்கே புரியும். அந்தகன் படம் முடிந்துவிட்டது. விரைவில் திரைக்கு வரும். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. முடிவானதும் சொல்வேன். அரசியலை பற்றி நீங்கள் (நிருபர்கள்) என்ன ேகட்டாலும் அது என் காதில் விழாது. இவ்வாறு பிரசாந்த் கூறினார்.

The post கோட் டில் என்ன கேரக்டர்: பிரசாந்த் பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prashant ,Chennai ,Vijay ,Tamil Nadu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஜய்யுடன் டான்ஸ் ஆட ஸ்ரீலீலா மறுப்பு