×

சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் இல்லை புகார் இல்லாத கோயில்களில் இந்து அறநிலையத்துறை தலையிடாது: அமைச்சர் சேகர் பாபு பேட்டி

மயிலாடுதுறை: சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. புகார் இல்லாத கோயில்களில் இந்து அறநிலையத்துறை தலையிடாது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் தருமபுரம் சென்று அங்குள்ள ஆதீன வளாகம் மற்றும் மடத்தினை பார்வையிட்டார். அங்கு நடைபெற்று வரும் பாடசாலை மற்றும் பள்ளி கல்லூரிகளையும் பார்வையிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட 27 திருக்கோயில்களில் தற்போது 18 திருக்கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு படிப்படியாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள்ளாகவே நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் திருக்குடமுழுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 1,000 கோயில்களுக்கு ரூ.1,500 கோடி செலவில் திருக்குடமுழுக்கு நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை, நரசிம்மர் மலை, பர்வதமலை, கண்ணகி கோயில் ஆகிய மலைகளில் பக்தர்கள் எளிதாக மலை ஏறுவதற்கு ஏற்ற வண்ணம், இயற்கை எழிலை பாதுகாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் ஆய்வு பணி ரூ.1 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. அங்குள்ள கனகசபையில் வழிபாடு 2019 கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. அதை தொடர அங்குள்ள தீட்சிதர்கள் தடுத்து வந்தனர். கனகராஜ் என்ற நபர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் கனகசபையில் வழிபாடு நடத்த அனுமதிக்க உத்தரவிட்டது. அதன்படி, இந்து அறநிலையதுறை நடவடிக்கை எடுத்தது. புகார் இல்லாத கோயில்களில் இந்து அறநிலையத்துறை தலையிடாது. பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டாலும், அது குறித்த புகார்கள் எந்த கோயிலில் இருந்து வந்தாலும் நிச்சயம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.* தமிழக முதல்வர் பங்கேற்க தருமபுர ஆதீனம் அழைப்புதருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் அளித்த பேட்டியில், மரபு வழி மாறாமல் நடைபெறும் இந்த ஆதீனத்துக்கு அரசின் அரவணைப்பு உள்ளது. ஆதீன கல்லூரியின் 25வது ஆண்டுவிழாவில் மறைந்த முதல்வர் கலைஞரும், 50ம் ஆண்டு விழாவில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனும் கலந்துகொண்டனர். வரும் ஆகஸ்ட் மாதத்தில் கல்லூரியின் 75ம் ஆண்டுவிழா நடக்கிறது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளேன் என்றார்….

The post சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் இல்லை புகார் இல்லாத கோயில்களில் இந்து அறநிலையத்துறை தலையிடாது: அமைச்சர் சேகர் பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Minister ,Sekar Babu ,Mayaladuthura ,Chidambaram Natarajar Temple Department ,Chidambaram Natarajar Temple ,Sekhar Babu ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...