×

பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோவம் வர வேண்டும் என உலக சுற்றுச்சூழல் தினத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெசென்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணியாக சென்று மக்களுக்கு மஞ்சப்பைகளை சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பொது மக்களுக்கு வழங்கினர்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும். பசுமை பரப்பின் விகிதத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் அபாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடியிருப்புகளில் ஒரே இடத்தில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கல்வி நிலையங்களில் கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். …

The post பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subharamanyan ,Chennai ,World Environment Day ,Maharashi ,Subramanian ,Minister Ma. The ,
× RELATED மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு...