×

கெடிலன் ஆற்றில் குளித்த 6 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கிய ஏ.குச்சிப்பாளையம் கிராமம்..!

கடலூர்: கடலூர் மாவட்டம் அருங்குணம் அருகே கெடிலன் ஆற்றில் குளித்த 6 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் ஏ.குச்சிப்பாளையம் அருகாமையில் கெடிலம் ஆறு உள்ளது. இப்பகுதி மக்கள் இந்த ஆற்றில் குளிப்பது வழக்கம். அந்த வகையில் அதன்படி இன்று காலை அதே பகுதியை சேர்ந்த 6 சிறுமிகள் உள்பட சுமிதா (16), பிரியா(17), மோனிகா(15), சங்கீதா(17), பிரியதர்ஷினி(14), கவிதா(12), மற்றும் இளம்பெண் நவநீதா(9) தடுப்பணையில் குளிக்க சென்றனர். ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளித்த போது 7 பேர் நீரில் மூழ்கினர். தடுப்பணையில் ஏற்பட்ட சூழலில் 2 பேர் சிக்கிய நிலையில் அவர்களை காப்பாற்ற முயன்ற 5 பேர் நீரில் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த அக்கம் பக்கத்தினர். ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டனர். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஏ.குச்சிப்பாளையம் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றன. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மருத்துவமனை வந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.25,000 வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணையில் மூழ்கி 7 பேர் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மண்ணின் தன்மை, குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்படும் எனவும் கூறினார்….

The post கெடிலன் ஆற்றில் குளித்த 6 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கிய ஏ.குச்சிப்பாளையம் கிராமம்..! appeared first on Dinakaran.

Tags : Kedilan river ,A. Kuchipalayam ,Cuddalore ,Arungunam ,Cuddalore district ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை