×

வால்பாறைக்கு முதல் கல்லூரியை தந்தவர் கலைஞர்: முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் புகழாரம்

சென்னை, : முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் கூலி ரூ.76.85 மட்டுமே, இந்த தொகையை ஜெயலலிதா ஆட்சியில் பத்து பைசா கூட கூட்டவில்லை. பஞ்சப்படியை கூட கொடுக்கவில்லை. நான் எம்எல்ஏவாக 2001 முதல் 2006 வரை இருந்தபோது பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் முதல்வராக இருந்த ஜெயலலிதா காதில் வாங்கவில்லை. ஆனால் 2006ல் முதல்வராக கலைஞர் பொறுப்பேற்றதும் வால்பாறைக்கு முதல் கல்லூரியை தந்தார். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்தார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் நாள் ஒன்றுக்கு ரூ.426 சம்பள உயர்வு வழங்கி அவர்களின் வாழ்க்கையை உயர்த்தி உள்ளார். இன்று இந்தியாவின் முதன்மையான முதல்வர் என்று மு.க.ஸ்டாலின் சாதனையாளராக விளங்குகிறார்.  இவ்வாறு அவர் கூறியுளார்…

The post வால்பாறைக்கு முதல் கல்லூரியை தந்தவர் கலைஞர்: முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Valparam ,MLA ,Goi Gold Fame ,Chennai ,Cov Gold ,Wall Bar ,Coe ,Gold Fame ,Dinakaran ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில்...