- சித்தார்த்
- பாலிவுட்
- ஆதிராவ்
- தெலுங்கானா
- சித்தார்த்
- ஸ்ரீரங்கபுர், தெலுங்கான
- சித்தார்த் ஆதிராவ்
- ரங்கநாயக சுவாமி கோயில்
- ஆதித்ரவ்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் ஸ்ரீரங்கபூரில் உள்ள கோயிலில் பிரபல நடிகர் சித்தார்த் பாலிவுட் நடிகை அதிதிராவ் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ரங்கநாயக சுவாமி கோயிலில் நடிகர் சித்தார்த் அதிதிராவ் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சித்தார்த் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே மேக்னா என்பவரை திருமணம் செய்த நிலையில் தற்போது பிரபல நடிகையான அதிதிராவ்-ஐ இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயகஸ்வாமி கோயிலில் அதிதி மற்றும் சித்தார்த் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த ஜோடி திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
மகாசமுத்திரம் படப்பிடிப்பின் போது அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த்தின் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இருவரும் தங்கள் உறவைப் பற்றி வெளிப்படையாகப் பேசியதில்லை எனவும் கூறப்படுகிறது. சண்டிகரில் நடந்த பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரலேகா திருமணத்தில் அதிதி ராவ் ஹைடாரி மற்றும் சித்தார்த்தும் கலந்து கொண்டனர். இது தவிர ஹைதராபாத்தில் ஷர்வானந்தின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். அதிதியும், சித்தார்த்தும் நீண்ட நாட்களாக லிவ்-இன் உறவில் உள்ளனர் எனவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாகும். சித்தார்த் முதலில் மேக்னா நாராயணை மணந்தார், ஆனால் அவர்கள் 2007இல் விவாகரத்து செய்தனர். அதேசமயம், அதிதி ராவ் நடிகர் சத்யதீப் மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். “நான் சத்யதீப் என்பவரை 21 வயதில் திருமணம் செய்து கொண்டேன், ஆனால் பின்னர் நாங்கள் விவாகரத்து பெற்றோம்” என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
The post நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட் நடிகை அதிதிராவ் ஆகியோருக்கு திருமணம் முடிந்தது?! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.