×

ஆர்‌.கே. பேட்டை அருகே பரபரப்பு இலவச வீட்டுமனைகள் நில அளவீடு செய்து பயனாளிகளுக்கு வழங்க எதிர்ப்பு: 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

பள்ளிப்பட்டு: ஆர்கே பேட்டை அருகே ராஜாநகரம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் சார்பில் அப்பகுதியில் வசித்து வரும் ஆதி திராவிடர்களுக்கு 100 இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிராமத்திற்கு மிக அருகில்  ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைகள் சர்வே செய்து பயனாளிகளுக்கு வழங்க அதே பகுதியில் மற்றொரு சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றனர்.  ஆதிதிராவிடர்களுக்கு  மற்றொரு இடத்தில் இலவச வீட்டு மனைகள் வழங்க தயாராக இருப்பதாக  கிராம மக்கள் சார்பில்  உறுதி கூறியும் அதனை ஏற்க  மறுத்து வருவதால்,  அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும்  பல ஆண்டுகளாக  இரு சமுதாய மக்களிடையே  சுமூக தீர்வு ஏற்படவில்லை. இப் பிரச்சனை  தொடர்பாக ஆதிதிராவிடர்கள் மனித உரிமை கழகம் சென்றனர். இதன் தொடர்ச்சியாக மூன்று மாதத்திற்குள் தமிழக அரசு இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களுக்கு சர்வே செய்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா தலைமையில் வருவாய் துறையினர்  இலவச வீட்டுமனை பட்டா  நில அளவீடு பணிகள் நேற்று மேற்கொண்டனர்.  இருப்பினும், சர்வே பணிகளுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்று முன் எச்சரிக்கையாக  உதவி  காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனித்  தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ராஜாநகரம் கிராமத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  போலீசாரை தாண்டி சர்வே பணிகள் தடுக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். போலீசார் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் இலவச விட்டுமனைகள் நில அளவீடு  செய்து பயனாளிகளுக்கு ஒப்படைத்தனர். …

The post ஆர்‌.கே. பேட்டை அருகே பரபரப்பு இலவச வீட்டுமனைகள் நில அளவீடு செய்து பயனாளிகளுக்கு வழங்க எதிர்ப்பு: 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : R.K. ,Pettah ,Pallipattu ,RK ,Rajanagaram ,Pettai ,Tamil Nadu government ,Sensation ,Dinakaran ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே காட்டுப்...