×

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் நர்ஸ் வீட்டின் பூட்டு உடைத்து 68 சவரன், ₹1.50 லட்சம் திருட்டு

* வளைகாப்புக்காக வைத்திருந்ததை நோட்டமிட்டு கைவரிசை* தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்திருவண்ணாமலை :  திருவண்ணாமலை வேங்கிக்கால் திருமலை நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நடேசன் மனைவி சித்ரா(50). திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மூத்த மகன் ராஜேஷ், மனநலன் பாதிக்கப்பட்டவர். இரண்டாவது மகன் விவேக், மருமகள் சசிகா. அனைவரும் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், வழக்கம்போல் நர்ஸ் சித்ரா நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மகன் விவேக், வேலை காரணமாக சென்னைக்கு சென்றுள்ளார். மருமகள் சசிகாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். எனவே, வீட்டில் மனநலன் பாதிக்கப்பட்ட மூத்த மகன் ராஜேஷ் மட்டும் இருந்தார். இரவு நேரத்தில் உறக்கத்துக்காக ராஜேஷ் மாத்திரை பயன்படுத்துவது வழக்கமாம். எனவே, வீட்டின் முன்பக்க மெயின் கதவை வழக்கம்போல் பூட்டிவிட்டு அவரது தாய் சித்ரா வேலைக்கு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று காலை வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய நர்ஸ் சித்ரா, வீட்டின் முன்பக்க கதவை இரும்பு கம்பியால் நெம்பி பூட்டை உடைத்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் அறையில் அவரது மகன் ராஜேஷ் உறங்கிக் கொண்டிருந்தார். அவரது அறைக்கு அருகில் உள்ள மற்றொரு படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த தங்க செயின், வளையல், மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட 68 சவரன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. மேலும், ₹4 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ₹1.50 லட்சம் ரொக்கம் ஆகியவையும் திருடு போயிருந்தது.இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசில் நர்ஸ் சித்ரா புகார் அளித்தார். தொடர்ந்து, டவுன் டிஎஸ்பி குணசேகரன், இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல், கைரேகை நிபுணர்களும் சோதனை நடத்தினர். ஆனாலும், எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. நர்ஸ் சித்ராவின் மருமகளுக்கு அடுத்த மாதம் வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். எனவே, வங்கி லாக்கரில் வைத்திருந்த நர்ஸ் சித்ராவின் நகைகள், மருமகளின் நகைகள் அனைத்ைதயும் சமீபத்தில்தான் எடுத்துவந்து வீட்டில் வைத்தது விசாரணையில் தெரியவந்தது. எனவே, அவர்களது குடும்ப பின்னணியை முழுமையாக நோட்டமிட்ட மர்ம நபர்கள், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். திருவண்ணாமலை பகுதியில் அடுத்தடுத்து நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்கள், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது….

The post திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் நர்ஸ் வீட்டின் பூட்டு உடைத்து 68 சவரன், ₹1.50 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai Venkikal ,68 Sawaran ,Thiruvannamalai ,Tiruvannamalai ,Venkikal ,Tirumala Nagar ,Sawaran ,
× RELATED மூடிக் கிடந்த வீட்டுக்குள் இறந்து...