×

சென்னை மருத்துவக் கல்லூரியில் 186வது இளங்கலை மருத்துவ படிப்பு நிறைவு விழா!: 36 பதக்கங்களை வென்று பிரசாந்த் என்ற மாணவர் சாதனை..!!

சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதற்கு முன்னர் மாநில கல்வி முறையில் பயின்று மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் சென்னை மருத்துவ கல்லூரியின் சிறந்த மாணவர் உட்பட 36 பதக்கங்களை பெற்று சாதனை படைத்திருக்கிறார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 186வது இளங்கலை மருத்துவ படிப்பு நிறைவு தினவிழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சிறந்த மாணவருக்கு வழங்கப்படும் ஜான்ஸ்டோன் பதக்கம் எஸ்.பிரசாந்த் என்ற மாணவருக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 36 பதக்கங்களை வெற்ற மாணவர் பிரசாந்த், நீட் தேர்வு இல்லாமல் மாநில கல்வி முறையில் பயின்று மருத்துவப் படிப்பில் சேர்ந்த கடைசி பேட்ச் மாணவராவார். தன்னுடைய பாட்டியும், தாயும் தான் மருத்துவப் படிப்பு மேற்கொள்ள தனக்கு உதவியாக இருந்ததாக பிரசாந்த் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய  பிரசாந்த், சிவில் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என்று தெரிவித்தார். மருத்துவம் சார்ந்த துறையில் அதிகாரியாகி மக்களுக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் தெரிவித்திருகிறார். அனைவராலும் பதக்கங்கள் வெல்ல முடியும் எனவும்  குறிப்பிட்டார். …

The post சென்னை மருத்துவக் கல்லூரியில் 186வது இளங்கலை மருத்துவ படிப்பு நிறைவு விழா!: 36 பதக்கங்களை வென்று பிரசாந்த் என்ற மாணவர் சாதனை..!! appeared first on Dinakaran.

Tags : 186th Graduation Ceremony of Undergraduate Medical Course ,Chennai ,Medical College ,Prashanth ,Tamil Nadu ,
× RELATED பூக்கடை பகுதியில் பரபரப்பு...