×
Saravana Stores

இளையராஜா பயோபிக் கமல் தொடங்கி வைத்தார்

சென்னை: இளையராஜா பயோபிக் படத்தை கமல்ஹாசன் நேற்று தொடங்கி வைத்தார். இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கையை தழுவி, பான் இந்தியா படமாக இளையராஜா என்ற படம் உருவாகிறது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்‌ஷன், மெர்க்குரி மூவிஸ் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்தை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேசும்போது, ‘இளையராஜாவை பற்றி ஒரு படத்தில் 3 மணி நேரத்தில் எல்லாம் சொல்லிவிட முடியாது. அதற்காக நீங்கள் (அருண் மாதேஸ்வரன்) பிரஷர் போட்டுக்கொள்ளாதீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இளையராஜாவின் இசையே உங்களுக்கு வழிகாட்டும்’ என்றார்.

தனுஷ் பேசும்போது, ‘எல்லோரும் இளையராஜாவின் பாடல்களை கேட்டுக்கொண்டே இரவில் தூங்குவார்கள். நான் இளையராஜாவாகவே நடித்து பழகி தூங்குவேன். எனக்கு ஆரம்ப காலத்தில் நடிப்பு பற்றி தெரியாதபோது, இளையராஜாவின் இசைதான் எனக்கு நடிப்பு கற்றுக்கொடுத்து. நான் அவரது பக்தன். அவராகவே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கடவுளின் ஆசிதான் காரணம்’ என்றார். இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், தயாரிப்பாளர்கள் வருண் மாத்தூர், சவுரப் மிஸ்ரா, ஸ்ரீராம் பக்திசரண், இளம்பரிதி, சிகே.பத்மகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post இளையராஜா பயோபிக் கமல் தொடங்கி வைத்தார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ilayaraja ,Chennai ,Kamal Haasan ,India ,Dhanush ,Arun Matheswaran ,Nirav Shah… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED லண்டனில் படிக்கும் எஸ்தர் அனில்