- ஆதுஜீவிடம் பிருத்விராஜ் லேஷ்சி
- சென்னை
- பிரித்விராஜ்
- ஹாலிவுட்
- ஜிம்மி ஜீன்-ல
- அமலா பால்
- கே.ஆர்
- பிளெஸ்ஸி. கோகுல்
- அடுஜீவிடம் பிருத்விராஜ் லெஷி
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: தேசிய விருது பெற்ற இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள, தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம் படத்தில், பிருத்விராஜ், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த நாவலான ஆடுஜீவிதம் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.
புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுனில் கே.எஸ். ஒளிப்பதிவு. படம் பற்றி சென்னைக்கு வந்த பிருத்விராஜ் பேசியதாவது: இந்தப் படம் கிட்டத்தட்ட 16 வருடப் பயணம். 2008ல் இயக்குனர் பிளெஸ்ஸி என்னிடம் வந்து, ‘நஜீப்பாக நீங்கள் தான் நடிக்க வேண்டும்’ எனக் கூறினார். மோகன்லால் சார், மம்முட்டி சார் என மலையாளத்தில் பெரிய ஸ்டார்கள் எல்லோரும் பிளெஸ்ஸியுடன் ஒரு படமாவது செய்து விட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். மூன்று, நான்கு வருடங்கள் பாலைவனத்தில் சிக்கிய ஒருவரின் வாழ்க்கையை இந்த கதை கூறுகிறது.
கதைக்காக படத்தின் ஆரம்பத்தில் நன்றாக எடை கூடினேன். கேரளாவில் படப்பிடிப்பு முடித்த பின்பு ஏழெட்டு மாதங்கள் படப்பிடிப்பை நிறுத்தி விட்டார்கள். எனக்கு உடல் எடை குறைய பிளெஸ்ஸி அவகாசம் கொடுத்தார். பின்பு 2020ல் ஜோர்டான் சென்று படப்பிடிப்பு தொடங்கினோம். ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே, கொரோனா வந்ததால் மூன்று மாதங்கள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் மொத்த குழுவும் அங்கேயே சிக்கினோம். இந்தப் படத்திற்கு நான் ஓகே சொன்ன 2008 சமயத்தில் எனக்கு திருமணம் ஆகவில்லை, தயாரிப்பாளர், டிஸ்ட்ரிபியூட்டர் என்று எந்த முகமும் அப்போது எனக்கு இல்லை. இத்தனை வருட பயணத்தில் எனக்கு இன்னொரு முகமாக இந்தப் படம் இருக்கிறது என்றார்.
The post எனது இன்னொரு முகம் ஆடுஜீவிதம் பிருத்விராஜ் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.