×

திருமயம் அருகே கோனாப்பட்டு கொப்புடையம்மன் கோயில் தேர்திருவிழா

திருமயம்:புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டு கொப்புடையம்மன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசிதி பெற்ற கோயிலாகும். இங்கு வருடம் தோறும் வைகாசி மாதம் 10 நாள் திருவிழா நடத்துவது வழக்கம்.கடந்த 30ம் தேதி 8ம் திருவிழா முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரானாது அம்மன் சிலை(பிரதிஷ்டை) இல்லாமல் கோயில் வாசலில் உள்ள தேரடியில் இருந்து பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர் தெற்கு தெரு பாட கோயில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு 8ம் நாள் திருவிழா முடிவடைந்தது. இதனை தொடர்ந்து 9ம் நாள் திருவிழாவின் போது கோயில் வாசலில் நிறுத்தி வைக்கபட்ட தேர் மீண்டும் வடம்பிடித்து இழுக்கப்பட்டு கோனாபட்டு பை காண்மாய்க்குள் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நீரில் வைக்கப்பட்டிருந்த கொப்புடையம்மன் சிலை தோில் வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சென்றனர். அம்மன் கோயிலை வலம் வந்து நள்ளிரவு சுமார் 2மணியளவில் தேரடியை வந்தடைந்தது. அப்போது ஊட்டு கொடுத்தல்(ஆடு பலியிடுதல்) நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடுகளை பக்தர்கள் கோயிலுக்கு பலிகொடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். இதில் ஆத்தங்குடி, கே.பள்ளிவாசல், கீழசீவல்பட்டி, நேமத்தான்பட்டி, கானாடுகாத்தான், காரைக்குடி, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்….

The post திருமயம் அருகே கோனாப்பட்டு கொப்புடையம்மன் கோயில் தேர்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Konapatu Koppudayamman temple ,Thirumayam ,Konapattu Koppudayamman temple ,Puthukkottai district ,
× RELATED திருமயம் தாலுகாவில் ₹5.35 கோடியில் 3 அணை...