×

3 ஒன்டே, 5 டி.20 போட்டியில் மோதல் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் தொடர் அட்டவணை

மும்பை:இந்திய கிரிக்கெட் அணி  தென்ஆப்ரிக்காவுடன் சொந்த மண்ணில் 5 டி.20 போட்டிகளில் மோதுகிறது. இதில் முதல் போட்டி வரும் 9ம்தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த தொடர் முடிந்த கையொடு அயர்லாந்து செல்லும் இந்தியா அந்த அணிக்கு எதிராக 2 டி.20 போட்டிகளில் மோதுகிறது. பின்னர் இங்கிலாந்துடன் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒன்டே மற்றும் 3 டி.20 போட்டிகள் ஆடுகிறது. டெஸ்ட் ஜூலை 1ம்தேதி  தொடங்குகிறது. ஜூலை 17ம்தேதியுடன் தொடரை முடித்துக்கொண்டு ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம்தேதி வரை வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 3 ஒன்டே மற்றும் 5 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இந்த தொடருக்கான அட்டவணையை வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதில் கடைசி 2 டி.20 போட்டி அமெரிக்காவில் நடைபெற உள்ளது.போட்டி அட்டவணைதேதி          போட்டி        இடம்        இந்திய நேரம்ஜூலை 22    முதல் ஒன்டே     டிரினிடாட்    இரவு 7மணிஜூலை 24    2வது ஒன்டே    டிரினிடாட்    இரவு 7 மணிஜூலை 27    3வது ஒன்டே    டிரினிடாட்    இரவு 7மணிஜூலை 29    முதல் டி.20    டிரினிடாட்    இரவு 8 மணிஆகஸ்ட் 1     2வது டி.20        செயின்ட் கிட்ஸ்.    இரவு 8மணிஆகஸ்ட் 2     3வது டி.20        செயின்ட் கிட்ஸ்.    இரவு 8 மணிஆகஸ்ட் 6        4வதுடி.20         புளோரிடா(யுஎஸ்ஏ)    இரவு 8மணிஆகஸ்ட் 7        5வது டி.20        புளோரிடா(யுஎஸ்ஏ)    இரவு 8 மணி…

The post 3 ஒன்டே, 5 டி.20 போட்டியில் மோதல் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் தொடர் அட்டவணை appeared first on Dinakaran.

Tags : India-WestIndies ,T20 ,Mumbai ,South Africa ,India ,-WestIndies ,Dinakaran ,
× RELATED டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!