×
Saravana Stores

அசோக் செல்வன் ஜோடியானார் அவந்திகா

சென்னை: டி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எம்.திருமலை தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கும் படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் வெளியிட்டனர். ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்னைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என இப்படத்தினை உருவாக்கியுள்ளார் பாலாஜி கேசவன்.

நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய,எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார்.

The post அசோக் செல்வன் ஜோடியானார் அவந்திகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ashok Selvan ,Chennai ,M. Thirumalai ,D Creations ,Balaji Kesavan ,Avantika Mishra ,Vijay Sethupathi ,Avantika ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன்