×

தாதா மூலம் மிரட்டியதாக புகார் நடிகர் அதிரடி கைது

சண்டிகர்: கனடா தாதாவின் ஆட்கள் மூலம் மிரட்டிய புகாரையடுத்து, பஞ்சாபி நடிகர் கர்தார் சீமாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பஞ்சாப் பிரிவு தலைவர் அக்‌ஷய் குமார், பஞ்சாபி சினிமா நடிகர் கர்தார் சீமா மீது அமிர்தசரஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ‘நடிகர் கர்தார் சீமாவிடம் சில லட்சம் ரூபாய் கடனாக கொடுத்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். பின்னர் கனடாவில் இருக்கும் தாதா கோல்டி பிரார் மூலம் என்னை மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதையடுத்து, அமிர்தசரஸ் சிவில் லைன்ஸ் போலீசார், கர்தார் சீமா மீது வழக்குபதிந்து அவரை கைது செய்தனர். முன்னதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ஒருவர், கைது செய்யப்பட்ட கர்தார் சீமாவுக்கு ஆதரவாக காவல் நிலையத்திற்கு வந்து அவரை விடுவிக்க முயற்சித்தார். ஆனால், அவரை போலீசார் விடுவிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் கனடாவில் இருந்து பஞ்சாப் வந்த கர்தார் சீமாவை வழிமறித்து அக்‌ஷய் குமார் தகராறு செய்தார். அதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post தாதா மூலம் மிரட்டியதாக புகார் நடிகர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Dada ,Chandigarh ,Kardar Seema ,Kanada ,
× RELATED டெல்லியில் உள்ள பல்வேறு தனியார்...