×

உம்ரான் பந்துவீச்சை எதிர்கொள்ள பயமா?..தெ.ஆ.கேப்டன் பவுமா பேட்டி

கேப்டவுன்: தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டி.20 தொடரில் ஆட உள்ளது. இதில் முதல் போட்டி டெல்லியில் வரும் 9ம்தேதி தொடங்குகிறது. இதற்கான தென்ஆப்ரிக்கா அணி நாளை டெல்லி வருகின்றது. இதனிடையே இந்தியா புறப்படும் முன் தென்ஆப்ரிக்கா கேப்டன் பவுமா கூறியதாவது : உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு ஒரு அற்புதமான வேகப்பந்து வீச்சாளர். ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு சிறந்த பந்துவீச்சாளர்களை கண்டுபிடிக்க முடிகிறது. தென்ஆப்பிரிக்காவில் நாங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு வளர்கிறோம். ஆனால் எந்த ஒரு பேட்டரும் 150 கிமீ வேகத்தில் பந்தை எதிர்கொள்ள விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் முடிந்தவரை நாங்கள் அதற்கு தயாராகி உள்ளோம். 150 கிமீ வேகத்தில் பந்து வீசும் வீரர்களும் எங்களிடம் உள்ளனர். உம்ரான் மாலிக் டீம் இந்தியாவிற்கு ஒரு சிறப்பு திறமை வாய்ந்தவர், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது ஐபிஎல் செயல்திறனைப் பின்பற்ற முடியும் என்று நான் நம்புகிறேன், என்றார்….

The post உம்ரான் பந்துவீச்சை எதிர்கொள்ள பயமா?..தெ.ஆ.கேப்டன் பவுமா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Umran ,Cape Town ,India ,T20 ,Captain Bauma ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை