×

ரேஷன் அரிசி கடத்த முயன்ற பெண் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, அவற்றை சிறுசிறு மூட்டைகளாக கட்டி, ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தி செல்ல தயார் நிலையில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து, அங்கு ரேஷன் அரிசி மூட்டைகளை ரயிலில் கடத்த முயன்ற பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ருக்மணி(53) என தெரியவந்தது. அவரை கைது செய்து 1200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்….

The post ரேஷன் அரிசி கடத்த முயன்ற பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Ration ,Ambatore ,Ambatore Citizenship Supply Officials Investigation Division ,Korakupet ,Dinakaran ,
× RELATED ஆலஞ்சோலை ரேஷன்கடையில் மீண்டும் ரேஷன்...