×

மருத்துவமனையிலிருந்து அஜித் டிஸ்சார்ஜ்

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அஜித்குமார். இவர் நேற்று முன்தினம் திடீர் என சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக வெளியான தகவல் திரையுலகினர் மத்தியிலும், அஜித்தின் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித் ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அஜித்தின் தரப்பில் இதற்க்கு விளக்கம் தரப்பட்டது.

அதாவது அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ம் தேதி முதல் மீண்டும் அஜர்பைஜான் நாட்டில் துவங்க உள்ளதாகவும், எனவே ரெகுலர் செக் அப்பிற்காக மட்டுமே அஜித் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவே அஜித் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அஜித் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அஜித் மருத்துவமனையில் இருந்து நேற்று காலை வீடு திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மருத்துவமனையிலிருந்து அஜித் டிஸ்சார்ஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajith ,Chennai ,Ajith Kumar ,Chennai Apollo Hospital ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்