×

சென்னை அடுத்த மாங்காட்டில் நேற்று கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் மீட்பு

சேலம்: சென்னை மாங்காடை அடுத்த கோவூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் சுரேஷ். இவர் தனது வீட்டை விற்பதற்காக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து, அந்த வீட்டை வாங்குவதற்காகவும், அதற்கான முன்பணத்தை அளிப்பதற்காகவும், நேற்றைய தினம் விலையுயர்ந்த கார்களில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்பொழுது வீட்டில் தனிமையில் இருந்த சுரேஷ்குமாரை கத்தி முனையில் மிரட்டி கடத்திச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்தது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அதேபோன்று, சொகுசு காரில் வந்த நபர்களையும் அழைத்து விசாரணை செய்தனர். இதில் சில துப்புகள் கிடைத்ததால், தனிப்படை போலீசார் சுரேஷ்குமாரை மீட்பதற்காக சேலம் விரைந்தனர். இதனை தொடர்ந்து, இன்று காலை சேலம் ஆத்தூர் அருகே போலீசார் சுரேஷ்குமாரை மீட்டனர். மேலும் அவரை கடத்திய முத்துராஜா, ராஜராஜன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 10 பேரை போலீசார் விரைவில் சென்னை அழைத்து வர ஏற்பாடு செய்யபட்டுள்ளது. தொடர்ந்து, அவர் எதற்காக கடத்தப்பட்டார்? கொடுக்கல், வாங்கல் விவகாரமா? என்பதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், முதற்கட்டமாக சுரேஷின் தம்பி வெளியாட்களிடம் ரூ.1 கோடி பணம் வாங்கியதாகவும், அதற்காகவே இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்பொழுது காவல்துறை மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.      …

The post சென்னை அடுத்த மாங்காட்டில் நேற்று கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mangat ,Chennai ,Salem ,Suresh ,Kovoor ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்